மட்டு பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழக முறைமையில் உள்வாங்கப்பட வேண்டும்: ஜனாதிபதி


கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழக அமைப்பில் உள்வாங்கப்பட்டு கைவிடப்படாமல் தேசிய சொத்தாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக செய்தி-
யர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுத்தல்.

வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்…

நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில் தொழிற்படை ஒன்றை உருவாக்குதல் மற்றும் அதற்கு உதவும் பாடத்திட்டத்தை தயாரித்தல்….

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல்….

தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு முன்னுரிமையளித்தல்…


தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்  (05) முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட உலக பொருளாதாரத்திற்கு திறமைவாய்ந்த இளம் தலைமுறைய உலகிற்கு வழங்கக்கூடிய கல்வி முறைமைக்குள் உடனடியாக பிரவேசிக்க வேண்டியுள்ளது. இதன்போது பரீட்சையை மையமாகக்கொண்ட கல்வி முறைமையிலிருந்து விலகி பிள்ளைகளின் தோல்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமக்க முடியாத சுமைகளை நீக்கும் வகையிலான பின்புலமொன்றை அமைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இதன்போது நாட்டின் தேவையையும் சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறைபற்றி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

கல்வித்துறை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியலில் இருந்து விலகி கல்வியியலாளர்களினால் அவை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் 2019ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். மேலும் குறுகிய கால அடிப்படையில் நாட்டுக்குத் தேவையான தொழிற்படை ஒன்றை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக முறைமைக்கு டிப்ளோமா கற்கைநெறிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சந்தையை இலக்காகக்கொண்டு ஆசிரியர் கல்லூரிகள், ஹோட்டல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அழிவுக்குள்ளாக இடமளிக்காது கூடிய விரைவில் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் இணைத்து தேசிய வளமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தேவையை கண்டறிந்து பாடநெறிகளை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்களை வலுவூட்ட வேண்டியுள்ளதுடன், போலியான நியாயங்களில் இருந்து விலகி கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்காக பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்து பயன்படுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் அதிகளவு மாணவர்கள் நாட்டுக்கு வழங்க வேண்டியுள்ளது. கலைத்துறையில் கல்விகற்று வருகின்றவர்களை குறுகிய காலத்தில் தகவல் தொழிநுட்ப அறிவுடன் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை நாட்டுக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொகையை வெற்றிடங்கள் ஏற்படாத வகையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கல்வித்துறைக்காக ஒரு வருடக் காலப் பகுதியில் தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்று இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இன்று இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் கல்வித்துறை தொடர்பான மதிப்பு வாய்ந்த ஒரு அறிகுறியாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -