மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவிகளை பொறுப்பேற்றார் பேராசிரியர் லக்‌ஷ்மன்!


லங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் பிரபல பொருளியலாளரான டபிள்யூ.டி.லக்ஷ்மன், 1994 – 1999 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு கல்வித்துறைக்காக அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், 2005 ஆம் ஆண்டு பேராசிரியர் லக்ஷ்மனுக்கு தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இராஜினாமாக் கடிதத்தினை கடந்த 02 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும், சில உள்நாட்டு மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டதால், டிசம்பர் 2 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 20 வரை இராஜினாமாவை நீட்டிக்க அவர் முடிவு செய்திருந்தார்.

அதன்படி கடந்த 20 ஆம் திகதி அவர் பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதை அடுத்து புதிய ஆளுநராக டபிள்யூ.டி.லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜூன் மாதம் இராஜினாமா செய்ய திட்டமிருந்த நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் கோரிக்கை காரணமாக முடிவை மாற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -