வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்


எம்.என்.எம்.அப்ராஸ்-

முதாய அடிப்படையிலான கிராம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (சபரி கம) கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளடக்கிய ஒவ்வொரு பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா பெறும தியான செயற் திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல் இன்று(19) கல்முனை 2ம் பிரிவில் இடம்பெற்றது .

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எம்.நிசார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசத்திற்கான இணைப்ப்பாளர் பி.சார்மில் ஜகான் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். நிசார் மற்றும் கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது இதன்மூலம்உட்கட்டமைப்பு ,வாழ்வாதாரம் ,பிரதேசத்தில் காணப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வது இத் திட்டத்தின் நோக்கமாகும் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -