மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளராக பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகமவினால் இந்நியமனம் ஞாயிற்றுக்கிழமை(8) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கல்முனை பிரதேசத்திற்கான பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களான ஜெகநாதன் கிஷாந்தன், ஆர்.சி.ரஜீவகுமார், அ.நிமலன் ஆகியோருடன் இணைந்து த. ஹரிபிரதாப் கல்முனை கல்முனை விகாராதிபதி சுமத்திர தேரரிடம் இடம் ஆசிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.