அன்பு மனித நேயம் கருணை ,எனபனவற்றை உலகுக்கு எடுத்துகாட்டி மக்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க ஜேசு பிரான் புனித கன்னிமரியாள் மகனாக இற்றைக்கு 2019 ஆண்டுக்கு முன் ஜெருசலம் பெத்லேமில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் இது போன்ற ஒரு நாளில் (25) அவதரித்தார்.
அவருடைய பிறப்பினை நினைவு கூறும் வகையில், உலக வாழ் கிருஸ்த்தவ மக்கள் வருடந்தோறும் பல்வேறு நிகழ்வுகள், மூலம் மகிழ்ச்சியினையும் பிறப்பினையும் நினைவு கூறும் வகையில,; நத்தார் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நத்தார் பண்டிகையினையொட்டி நாடு முழுவதும் உள்ள கிறிஸ்த்தவ தேவலயங்களில் பல்வேறு நிகழ்வுகள் 25 ம் திகதி நல்லிரவு முதல் நடைபெற்றன.
ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான கிறிஸ்த்தவ ஆலயங்களில் ஒன்றான புனித திருச்சிலுவை ஆலயத்தில் ஹட்டன் வாழ் கிறிஸ்த்தவ மக்கள் ஒன்று கூடி தேவாரதனைகளில் ஈடுபட்டதுடன,; அவரின் பிறப்பினை வரவேற்று கெரோல் கீதங்கள் இசைத்தனர்.
அதனை தொடர்;ந்து விசேட பூசைகள்,திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆகியன இடம்பெற்று தேவ பிரசங்கங்களும் இடம்பெற்றன.
இதன் போது ஏப்ரேல் 21 இலங்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிர் நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து விசேட பிராத்தனைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு தோட்டப்புறங்களில் வாழும் கிறிஸ்த்தவ பெருமக்கள் உட்பட பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் உள்ள கிறிஸத்தவ தேவலாயங்களுக்கு இம்முறை அம்மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் மற்றும் இரானுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேவ ஆராதனைகளையும் பூசை வழிபாடுகளையும் ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன.