இது குறித்து அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
தமிழ், முஸ்லிம் மக்கள் காலம் காலமாகக் கிழக்கில் மிக அன்னியோன்னியமாக- ஒருதாய் பிள்ளைகள் போன்று வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். இந்நிலையில் இதனை குழப்பி அடித்து அவர்களுக்கு மத்தியில் வேற்றுமைகளை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் பிரிவினைகளை ஏற்படுத்தி தத்தமது சுயலாபங்களுக் கான வழிமுறைகளை திறக்க சிலர் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக இருப்பதும் வெள்ளிடைமலை.
இந்த நிலைமையானது சிறுபான்மை சமூகங்களில் இருப்புக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 'ஊர் இரண்டுபட்டால் கூத் தாடிக்கு கொண்டாட்டம்' என்பது போல் பேரினவாதச் சக்திகளும் இதற்குத் தூப மிட்டு வருகின்றன. எனவே இத்தகைய சக்திகளின் சிந்தனைகளுக்கு நாம் உயிரூட் டாமல் எமது ஒற்றுமையை வலுப்படுத்த திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.
பிரித்தாளுதல் என்பது அரசியல் சாதுரியத்தின் உச்சகட்ட வழிநிலையாகும். இத னைக் கைக்கொள்வதில் பேரினவாதிகள் சமார்த்தியசாலிகளாக இருக்கின்றனர். அவர்களது இந்த அனுகுமுறைதான் நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்தன. இதுவே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்படக் காரணமாகவும் உள்ளன.
இவற்றையெல்லாம் சரிவர புரிந்து கொள்ளாத அரசியல் தலைமைகள் சில, இவற் றுக்கு தற்போதும் துணைபோகத் தலைப்படுகின்றன. இது காத்திரமான நடைமுறை யல்ல எனவே சிறுபான்மை சமூகங்கள் தமது ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தை யும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டு சமாதானத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பும் அதேவேளை, தொடர்ந்தும் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு துணை போகாதீர் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன் - என்றுள்ளது.