போதனாசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்ற முடியாது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

ஐ. ஏ. காதிர் கான்-

ல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என்றும், போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் கல்வி நிறுவனங்களின் ஆளும் அதிகார சபை (பேரவை) அனுமதியுடன் நொத்தாரிசுகளாகப் பணியாற்ற முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அவதானங்களுக்கு அமைவாக 21.11.2013 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 885 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, 05.09.2019 இல் நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெஹான் டி. சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10/2019 ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கையின் மூலம் சகல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்திருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -