பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்குட்பட்டது!


போர்க்குற்றங்கள், அவுஸ்ரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் அவுஸ்ரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி ) மற்றும் நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் பொலிசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம் சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அவுஸ்ரேலிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ ” The culture of secreacy ” உருவாகி வருவதாகவும், மூன்று ஊடகவியலாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைத்ததற்கு எதிராகவும், அமெரிக்கா,கனடா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்துடன் ஒப்பிடும் போது ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு அவுஸ்ரேலியாவில் பத்திரிக்கை சுதந்திர சட்டம் கடுமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக அவுஸ்ரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து (Black out front pages ) வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன. இதேவேளை தொலைக்காட்சி நிறுவன காலை நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடம் குறித்த கேள்வி “When the government hides the truth from you, what are they covering up?” கேட்கப்பட்டது. அதாவது, அரசாங்கம் உண்மையை உங்களிடம் இருந்து மறைக்கும் போது, அந்த உண்மையை எவ்வாறு நியாயப்டுத்துகின்றார்கள?

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நாளிதழிலின் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது நாளிதழ் , தி அவுஸ்ரேலியன் (The Australian ) மற்றும் தி டெய்லி டெலிகிராப் (The daily Telegraph ) உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை (photo) ரருவிட்டரில் பதிவு செய்தார்.

மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஏபிசி (APC) நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘அவுஸ்திரேலியா உலகின் மிக இரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை (Right to Know) கொஞ்சம் கொஞ்சமாக சவாலுக்கு உட்படுத்துகின்றது என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.

TJ-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -