கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் குடும்பங்களின் துயர் போக்கும் தூய நோக்கில் செயற்படும் "காந்தா சவிய" (மகளிர் சக்தி) அமைப்பு, இம்முறையும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கியது.
இந்நிகழ்வு, அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தலைமையில் (28) சனிக்கிழமை மாலை, கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, திலங்க சுமதிபால, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், மாத்தளை நகர சபை முன்னாள் தலைவர் ஹில்மி கரீம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மாணவ மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும் இதன்போது அரங்கேறின. கொழும்பு மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் "காந்தா சவிய" அமைப்பு, வறிய மக்கள் துயர் துடைக்கும் தூய பணியை சுமார் இருபது வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இவ்வமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் இன, மதம் பாராது சகல இனத்தவரதும் வாழ்வுக்குக் கைகொடுத்து கரம் நீட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.