கல்முனை மாநகர சபையின் பதில் செயலாளராக ஆரிப் நியமனம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிபை, பதில் சபைச் செயலாளராக நியமிப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை கல்முனை மாநகர சபையின் பசளை உற்பத்தி நிலையத்திற்கு செல்கின்ற பெரிய நீலாவணை கடற்கரை வீதியை அவசரமாக கொங்க்ரீட் பாதையாக புனரமைப்பு செய்வதென மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கடந்த சில வாரங்களாக பெய்து வருகின்ற மழை வெள்ளம் காரணமாக இவ்வீதி கரைந்து கடுமையாக சேதமுற்றிருப்பதனால் அவ்வீதியூடாக எமது மாநகர சபையின் கனரக வாகனங்கள் குப்பைகளை ஏற்றிச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால் திண்மக்கழிவகற்றல் சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பெரும் அவஸ்தைப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய முதல்வர், கிரவல் வீதியான இப்பாதையை அவசரமாக கொங்க்ரீட் வீதியாக புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதற்காக குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை வேலைத் திட்டத்தின் கீழ் நிதியை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது.
அதேவேளை கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிபை, பதில் சபைச் செயலாளராக நியமிப்பதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரை சபைச் செயலாளராக கடமையாற்றி வந்த இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த எம்.ஐ.பிர்னாஸ் எமது கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக பதவியேற்றிருப்பதையடுத்து, அப்பதவி வெற்றிடமாகியிருப்பதனால் இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த ஒருவர் புதிய செயலாளராக நியமிக்கப்படும் வரை எமது மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்ற சிரேஷ்ட சுப்ரா தரத்தை சேர்ந்த ஏ.எம்.ஆரிப், அப்பதவிக்கு மேலதிகமாக தன்னால் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அக்கடமைக்காக விசேட கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த மாநகர முதல்வர், அதற்கு சபையின் அங்கீகாரத்தை கோரியிருந்தார்.
அதேவேளை கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்காக பழைய கட்டிடம் உடைத்தகற்றப்படும்போது அங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் பேணிப்பாதுக்கப்பட வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர், "நிச்சயமாக அவை பாதுகாக்கப்படும். ஏலவே சம்மந்தப்பட்டவர்களுக்கு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எமது மாநகர சபையின் தொன்மையையும் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.
இப்பொதுச் சபை அமர்வில் நிதிக்குழு, பொது வசதிகள்சார் உப குழு என்பவற்றின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் ஆராயப்பட்டதுடன் வெள்ள அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகள், புதிய தொழில் நியமனங்கள், கல்முனை பொதுச் சந்தை விவகாரம், மாநகர சபை உறுப்பினர்களுக்கான அலுவலகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. இதன்போது சில சந்தர்ப்பங்களில் சூடான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -