சாய்ந்தமருதை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்!(படங்கள்)

ருதூரை அழகுபடுத்தும் நோக்கோடு (#Clean_Green_Maruthoor) சுயமாக ஒன்றிணைந்த சாய்ந்தமருதின் "இயற்கையை நேசிக்கும் மன்றம்" (Nature Loving Forum) அமைப்பினரால் இன்றைய தினம் (25.12.2019) சுனாமியில் வபாத்தான சுகாதாக்களின் நினைவாக சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியை சிரமதானம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதற்கு தேவையான வாகன வசதிகளை கல்முனை மாநகர கௌரவ மேயர் ஏ. எம். றக்கிப், ஆணையாளர் எம்.சி. அன்சார் ஆகியோர் ஏற்பாடு செய்துகொடுத்தனர். இன்று விடுமுறை தினமாக இருந்தும் மாநகர சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் உறுப்பினர்களோடு, பொதுமக்களும் சேர்ந்துகொண்டதுடன், தாமாகவே தாகம் தீர்க்கும் பானங்களை வழங்கினர்.
காலை உணவை கல்முனை Taj Restaurant வழங்கியிருந்தது.

துப்புரவு செய்யப்பட்ட குறித்த இடத்தை மேற்கொண்டும் குப்பைகளை வீசி அசிங்கப்படுத்தாமல், சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன், தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இயற்கையை நேசிக்கும் மன்றத்தினர் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் சில தீர்வுகளைக் காண்பதற்கு கல்முனை மாநகர கௌரவ மேயருடன் அண்மையில் சந்திப்புகளை ஏற்படுத்தி பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி DNA-



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -