அம்பாறை மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்புகிறது!

வெள்ளம் வடிகிறது:இருவாரங்களுக்குப்பின் சூரியன்சந்திரனைக்காணும் மக்கள்!
காரைதீவு நிருபர் சகா-

ருவாவரகால அடைமழை வெள்ளத்திற்குப்பிற்பாடு அம்பாறை மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.(13) வெள்ளிக்கிழமை நன்றாக வெயில் எறித்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் பரபரப்பாக இயங்கினர்.

மக்கள் தங்கள் வீடுவாசல்களை துப்பரவுசெய்வதிலும் மழைக்கால உணவுவகைகளை கொள்வனவுசெய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.
காரைதீவு பிரதான வீதியில் சோளம் கச்சான் பனங்கிழங்கு மாம்பழம் மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவுப்பண்டங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றது.

மக்கள் விலை உச்சத்திலுள்ள மரக்கறி மீன்களையும் கொள்வனவுசெய்துவருகின்றனர்.

மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளார்கள். எனினும் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள வெள்ளம் இன்னும் முற்றாக வற்றவில்லை. இதனால் டெங்கு போன்ற தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை கார்த்திகை விளக்கீட்டுடன் வானம் சீராக இருக்கிறது. நேற்று (11) வெயில் நன்றாக எறித்தது. கடந்த இருவாரங்களுக்குப்பின்னர் மக்கள் சந்திரன் சூரியனைப்பார்க்கிறார்கள்.

அன்றாடக்கூலித்தொழிலாளிகளின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவுள்ளது. கடந்த 18நாட்களாக தொழிலுக்குச்செல்லவில்லை.அதனால் கையில் பணமில்லாமல் அலைகிறார்கள்.
வெள்ளத்தால் காரைதீவு 11 மற்றும் 12 மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏனையபிரிவுகளும் வெள்ளத்துள் ஆழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் யாராகவிருந்தாலும் மனிதாபிமானரீதியில் உதவவேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் உலருணவு விநியோகம் நடைபெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -