அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கின் பெருக்கம் அதிகரித்துவருவதனால் அதனை கட்டுப்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கான புகை விசுறும் இயந்திரத்தை, அட்டாளைச்சேனை பிரதேச சபை கொள்வனவு செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைக்கவுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வருடத்திற்கான இறுதி அமர்வு நாளை(19) சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், உறுப்பினர் ஜெமீலா ஹமீட் மேற்படி பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் டெங்கின் அபாயம் அதிகரித்து வருவதுடன், பலர் இந்நோயினால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.
டெங்கினை கட்டுப்படுத்துவதற்கு புகை விசுறும் முறையே மிகவும் பிரபல்லியம்பெற்றுள்ளதால், உரிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதற்கான இயந்திரம் வழங்கப்பட்டு உரிய நேரத்தில் புகைவிசுறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருமுன் பாதுகாக்க முடியும்.
குறித்த இயந்திரத்தை பிரதேசபை கொள்வனவு செய்து வழங்குவதற்கான பிரேரணையினையை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் முன்வைக்கவுள்ளார்.