இலங்கை தமிழரசு கட்சியே இன்று இளைஞர்களுக்கான அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளது!


இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன் அறிக்கை.
காரைதீவு நிருபர் சகா-
டித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மனமகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது ஆனாலும் இது புதிய விடயமல்ல ஏனெனில் இலங்கை தமிழரசு கட்சியே இன்று இளைஞர்களுக்கான அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளது .

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்யின் வாலிபமுன்னணி துணைச்செயலாளர் அருள.நிதான்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:


அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு நாம் ஒற்றுமையாக வாக்களிப்போமாக இருந்தால் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்.மேலும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளமையால் அதன் சாத்தியப்பாடுகள் அதிகரித்து உள்ளன.இருந்தபோதும் இன்றைய பிரதேச பிரிவினைகளையும் ஆளுக்கொரு கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழ் மக்களிடையே பிரிவினைகளை தோற்றுவித்து உள்ளது.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் நாம் ஒற்றுமைபட வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.இவ்வாறு இரு பாராளுமன்ற பிரதிநிதிகள் பெறக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதிக கட்சிகளின் உருவாக்கத்தால் சிறுபான்மையாக அம்பாறையில் இருக்கும் தமிழர்கள் எவ்வித பிரதிநிதிகளையும் பெற முடியாத நிர்கதிக்கு உள்ளாக நேரிடும்.எம்மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.அதற்குரியவகையில் எம் மக்களுக்கான தெரிவு அவர்கள் விரும்பும் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.

இதனை இம்முறை இலங்கை தமிழரசு கட்சி முன்னுதாரணமாக கொண்டு செயல்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ திரு.இரா.சம்மந்தன் அவர்களால் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மனமகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது ஆனாலும் இது புதிய விடயமல்ல ஏனெனில் இலங்கை தமிழரசு கட்சியே இன்று இளைஞர்களுக்கான அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி திறம்பட செயலாற்றுக்கின்றது அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் கட்டாயமாக இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர்களின் அரசியல் அடையாளத்தை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகின்றோம்.

மேலும் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கல்முனை மக்களின் கோரிக்கையான வடக்கு பிரதேச செயலக கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.அதற்காக கடந்தகாலத்தில் கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றம் கண்டபோதிலும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்கின்ற மன ஆதங்கமும் அதிருப்தியும் மக்களிடையே காணப்படுவது நியாயமானதே.இருந்தும் இதனை காட்டி ஒருசில அரசியல் கட்சிகள் இலாபம் தேடிவருகின்றனர்.


இவ்வாறான தருணத்தில் அம்பாறை மாவட்டத்தில் எமக்கான பாராளுமன்றத்தின் குரல் இரண்டாக ஒலிக்க வேண்டும் அது எம் மக்களின் கைகளில் தங்கியுள்ளது.அனைவரும் ஒற்றுமையாக பிரிவினை இல்லாது வாக்களிப்பு செய்ய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -