திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப்
கிண்ணியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைக்கையில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு தற்பொழுது அச்சம் ஏற்பட்டுள்ளது 1936ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கட்சியினுடைய ஸ்தாபக தலைவர் எஸ்டர்டே வண்டார நாயக் செனட் சபையில் பேசுகின்றபோது கூறினார்.
இரண்டு மொழி ஒரு நாடு ஒரு மொழி இரண்டு நாடுகள் என்று கூறினார் வடக்கு பொறுத்தவரையில் தமிழ் மொழியை தமிழ், முஸ்லிம் மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர் மொழிச் சட்டம் சட்டரீதியாக கொண்டுவரப்பட்ட போதும் 18வது சீர்திருத்தத்தில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து என்று கூறினார். நாம் தெரிவு செய்த ஜனாதிபதி 2015ஆம் பதவியேற்பு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டது இவர்களுடைய நடவடிக்கைகள் குறிப்பாக கேபினட் அமைச்சர் இரண்டு பேரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன.
தென்னக்கோன் கூறுகின்றார் நாங்கள் இனிமேல் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை என்று டலஸ் அழகப்பெரும கூறுகின்றார் நாங்கள் அவ்வாறான ஒரு தீர்மானத்தை அமைச்சரவையில் எடுக்கவில்லை என்று அவ்வாறாக இருந்தால் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் அமைச்சரவையை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கின்றார்களா அல்லது வெள்ளோட்டமிட்டு மக்களின் கருத்துக்களை இதற்கு எதிர்பார்க்கின்றார்களா?
இஸ்லாம் எமது மார்க்கம் ஏற்கனவே 1957ஆம் ஆண்டு ஷரியா சட்டம் ஆக்கப்பட்டுவிட்டது இது சட்டரீதியாக கொண்டுவரப்பட வேண்டிய விடயம் இதனைப் பற்றிப் பேசுவதற்கு ரத்ன தேரர் யார்? அவர் சட்டம் படித்தவரா தற்பொழுது சட்டக்கல்லூரி உள்ள மாணவர்களும் ஷரியா சட்டத்தை படிக்கின்றார்கள் இது எங்களுக்குள் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதனை முஸ்லிம் சமூகம் தீர்மானித்துக் கொள்ளும் ராவண பலய சிங்கள பலய பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களின் கருத்துக்களை வெள்ளோட்டம் விடுகின்றார்களா? இதனை தமிழ் முஸ்லிம் மக்களிடம் இருந்து என்ன கருத்து வருகின்றது என்று ஆராய்கிறார்கள் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தி இம்முறையும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறார்களா? இவ்வாறான சந்தேகம் ஒவ்வொரு சிறுபான்மை மகனுடைய மனதிலும் ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை இந்த நாட்டிலுள்ள ஜனாதிபதி மற்றும் அவர்களுடைய அமைச்சர்கள் கூறுவது போன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது அது போன்று ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றது எப்போதும் பெற முடியாது* இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து போட்டியிட்டால் 100 ஆசனங்களைக் கூட பெற முடியாது 45 வீதத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் நாட்டினுடைய பிரதமரை தீர்மானிப்பது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எதிர்காலத்தில் ஒரு நல்லிணக்க ஆட்சியை ஏற்படுத்துவதற்காக மலையக மற்றும் வடகிழக்கு மக்களால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.