க.கிஷாந்தன்-
பண்டாரவளை – வெல்லவாய பிரதான வீதியில் எல்ல சுரங்கப்பகுதிக்கு அருகாமையில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக 20.12.2019 அன்று மதியம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்துவரத்து தடைப்பட்டிருந்தது.
அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவ்வாறு மண்சரிவோடு, மரமும் முறிந்து விழுந்துள்ளது.
எல்ல பிரதேச சபையினர் மற்றும் எல்ல பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஏற்பட்ட மண்சரிவையும், முறிந்து விழந்த மரத்தையும் அகற்றினர். அதன்பின் அவ்வீதியினுடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.