சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 'வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் (18) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்கள், நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நூலங்களின் ஊழியர்கள் உள்ளி;ட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நூலகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.