2018 ஆண்டு 2019 ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்து மற்றும் பங்குபற்றி சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முத்தையன் கட்டு பாடசாலையில் நேற்று(6)காலை ஒன்பது மணியளவில் நடைபெற்றது இதன்போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் ஆற்றிய உரை
இந்த பிரதேசம் ஒரு வளம் குறைந்த பிரதேசம் அல்ல இது வளம் கொளிக்கும் பிரதேசம் நாங்கள் வடபகுதியில் மூன்று மாவட்டங்களையும் சேர்த்த வன்னி பிரதேசத்தில் எத்தனையோ கிராமங்களை பார்த்திருக்கின்றோம்
எதை நட்டாலும் வளராத மண்கள் எப்படி வீட்டைக்கட்டி வாழ்வது என்று தெரியாத இடங்கள் தண்ணீர் எடுப்பதற்கு வளம் இல்லாத இடங்கள் இப்படி எத்தனையோ இடங்களை பார்த்திருக்கின்றோம் வருகின்ற தண்ணீர் கூட உப்புத் தண்ணீராக உள்ளது மழைபெய்தால் சதுப்பு நிலம்
மழை வெள்ளம் வந்துவிட்டால் வீட்டுக்குள்ளே தண்ணீர் இப்படி எத்தiயோ வளம் குறைந்த இடங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம் ஒட்டுசுட்டான் ஒரு வளம் கொழிக்கும் பிரதேசம் இங்கு உள்ள ஒட்டு சுட்டான் குளம் எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே மக்கள் தாங்களாகவே முயற்சி செய்ய வேண்டும்
ஒரு மணிதனின் ஏழ்மையும் நல் வாழ்வும் அவரது கையில்தான் உள்ளது தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக வளரலாம் ஆனால் ஒட்டுசுட்டானுக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது முத்தையன் கட்டுக்கு அந்த பிரச்சனை இருக்கின்றது அத என்ன வென்றால் இங்கிருந்து ஒரு ஒரு போக்கு வரத்து பஸ் வருனியா வரையில் சென்று வரும் நிலை இருந்தது/\.
அ;த இப்ஆபாது உள்ளதா என்பது தெரியாது அதற்கு காரணம் வீதிகளின் நிலமை என்னுடைய பிர|தேச மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் விதி அபிவிருத்தி அதற்கடுத்தாக ஏற்கனவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிதயை விடுவிக்காமல் டிஇழுத்தடிப்பு செய்தமையால் இல்லாமல் போய்விட்டது .
கடைசி நேரத்தில் ஒட்டுசுட்டான் இடது கரைக்கு உரிய வீதியை சீர் செய்யக் கூடியதாக உள்ளது அடுத்து இடது கரை வீதியை வலது கரை வீயியுடன் இணைக்க வேண்டிய தேவை ஒன்று இப்பொழுது உள்ளது இது மேலதிகமாக எனக்கு உள்ள பொறுப்பு அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவதற்கு நான் மிகவும் ஆவலாக உள்ளேன் இந்த குளத்தை பொறுத்தவரை இந்த குளத்து அபிவிருத்திக்காக சீன அரசு ஒரு குழுவை அனுப்பியிருந்தது இந்த குளத்துக்காக தாங்கள் ஆயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபாய்கள் நீர் விநியோக அமைப்பை சீர் செய்வதற்காக தாங்கள் ஒதுக்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் தமழ் தெசிய கூட்டமைப்பு அந்த விடயத்தை என்னிடம்தான் தந்திருந்தார்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள சீனாவின் அபிவிருத்திகளை ஒழுங்கமைப்பு செய்வதற்காக தந்திருந்தார்கள் வடபகுதியில் சீனாவின் அபிவிருத்தியை இந்தியா விரும்பவில்லை அதனால் அந்த வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.
அதன் பின் தாங்கள் ஒதுக்குவதாக அமைச்சு ஏற்றுக் கொண்ட நிதிதான் இப்பொழுது ஐந்நூறு மில்லியன் அளவில்தான் அது ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இனாமாக தரப்பட இருந்த ஆயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபா நிதியை இல்லாமல் செய்யப்பட்டு கடனாக ஐந்நூறு மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இதுதான் எமது சூழல் என்பதாம் ஆண்டுகளில் புதுக்குடியிருப்பு மக்கள் முத்தையன்கட்டு தண்ணிரை மன்னாகண்டல்வரை கொண்டு போய் மண்ணா கணடல் பிட்டியில் மிளகாய் கன்று செய்தார்கள் அந்த மிளகாய் விவசாயத்தை செய்த மக்கள்தான் முப்பது நாற்பது டெக்டர்கள் வாங்கினார்கள் அதில் எனது தந்தையாரும் ஒருவர் அப்படி விவசாயத்தை செய்து அதில் இருந்து அவர்கள் மீண்டு வந்தவர்கள் அதேபோல் அதே வசதி இன்றும் தொடர்ச்சியாக இங்கு இருக்கின்றது அது அவர்களின் முயற்சி எனவே போக்கு வரத்துப் பிரச்சனை இங்கு நிச்சயமாக தொழில் செய்வதற்கு தேவையானது இந்த மக்களுக்கான வளங்கள் கொழிக்கும் பிரதேசத்தில் இந்த மக்கள் இருக்கின்றார்கள்.
மக்கள் சுய முயற்சியால் தாங்களாகவே வளரவேண்டும் கற்சிலை மடு பாடசாலையில் ஆசிரியராக 82ம் ஆண்டு கல்வி கற்பித்திருந்தேன் இப்போது இந்த மாணவர்களைப்பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமா இருக்கின்றது .
எங்குமே அழுக்கு இல்லை வெள்ளை வெள்ளையாக இருக்கிறார்கள் என்னிடம் படிக்கும் போது மாணவர்கள் கிரவல் கலரில் வருவார்கள் அவ்வளவிற்கு வீதிகள் அப்பொழுது மிக மோசமான நிலையில் இருந்தது இன்றைய நிலையில் மாணவர்கள் கூட பிற மாவட்டங்களுக்கு இணையாக புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள் இது ஒருசாதனை இந்த சாதனையின் பங்கை நாங்கள் அதிபருக்கு வழங்கலாம் ஏனெனில் அவர்தான் இந்த பாடசாலையை ஆரம்பித்து நல்ல முறையில் உருவாக்கியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது எனவே இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு கல்வி எனவே இந்த கல்வியை வைத்துக் கொண்டுதான் இனிமேல் நாங்கள் வளரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்று அரசியலில் தமிழர்களுக்கு எதிரான இனவாத சிந்தனை அரசை உருவாக்கி இருக்கின்றது அதற்கான பல காரணங்களை சொல்லலாம் தமிழர்களுடன் ஏற்கவே இருந்த அரசு இசைந்து சென்று கொண்டிருந்தது தமிழர்களின் பிரதேசங்களின் அபிவிருத்திகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் எமது உரிமைகளை நிலை நிறுத்தி நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம் இவைப அனைத்தும் ஒரு இனவாதமாக கக்கப்பட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் திருப்பி விடப்பட்டு 1948 ம்ஆண்டு இருந்த ஒரு நாட்டு நிலமையை இன்று மீண்டும் கொண்டு வந்து விட்டுள்ளார்கள் என்று வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டிரு ந்த ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி பங்கையற் செல்வன் மற்றும் அதிபர் நாகேந்திரராஜா ஆசிரியர்கள் அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.