நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான பத்தனஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்
தை வெட்டி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15.12.2019 அன்று மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து பல இலட்சம் பெறுமதியான 15.5 கிலோ வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்த சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், எதிர்வரும் புதன்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டு பகுதியில் இந்த வல்லப்பட்டை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இதை சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்பவர்கள் அதிகமானோர் இப்பகுதியில் வாழ்கின்றார்கள்.
உலகில் மிக அதிக விலை கொண்ட வாசனை திரவியங்களை தயாரிப்பதற்காக இந்த வல்லப்பட்டை மரங்களை உபயோகிப்பதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.