பொலிசாரின் அவசரச் செய்தி- ஜனாதிபதியின் இணைப்பாளர் அல்லது நெருக்கமானவர் என்று யாரும் வந்தால் உடனே தகவல் வழங்கவும்.

னாதிபதியின் இணைப்புச் செயலாளர் அல்லது ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பு உள்ள நபர் எனக் கூறி பல்வேறு விதத்தில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி நடவடிக்கைகளில் ஈடுப்படல் மற்றும் மக்களுக்கு சட்டவிரோதமான முறையில் அழுத்தம் கொடுத்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளன.

எனவே இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதற்கமைய மேற்குறிப்பிட்ட விதத்தில் மோசடி அல்லது சட்ட விரதமான முறையில் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தால் அல்லது இது போன்று ஏதாவது மோசடியில் ஈடுப்பட்ட நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியுமாயின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்க முடியும்,

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- மேல் மாகாணம்

தேசபந்து தென்னகோன்- 0718591017

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- வட மாகாணம்

ரவி விஜேகுணவர்தன- 0718591009

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- மத்திய மாகாணம்

எஸ்.எம் விக்ரமசிங்க- 0718591001

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- தென் , சப்ரகமுவ மாகாணம்

ரொஷான் பெர்ணான்டோ- 0718591028

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் -

வட மத்திய ,வட மேல் மாகாணம்

நந்தன முனசிங்க- 0718591008

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - ஊவா மாகாணம்

டப்.எப்.யு. பெர்ணான்டோ- 0718591011

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - கிழக்கு மாகாணம்

லலித் பதினாயக்க- 0718591985


கொழும்பு நகர் பகுதியில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக தகவல் தெரியுமாயின் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

பணிப்பாளர் - கொழும்பு மோசடி தடுப்பு விசாரணை பிரிவு

பொலிஸ் அத்தியட்சகர் – டப்.எல்.ஜே. ரஸ்ஸல் டி சொய்சா

தொலைபேசி இலக்கம்- 0718591736
நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்து குறித்த நபர்கள் தொடர்பாக தகவல்களை 119 வழங்கமுடியும்.

பொலிஸ் மா அதிபர் கட்டளையிடும் தகவல் மையம் - கடமை அதிகாரி தொலைபேசி இலக்கம்-011 – 2854885
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -