வாகன விபத்து ஏற்படுத்திய சம்பிக்க ரணசிங்க அவர்களை கைது செய்ய முடியுமென்றால் மத்திய வங்கியினை கொள்ளையி;ட்டவர்களை ஏன் கைது செய்ய முடியாது


நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளர் பெரியாசாமி பிரதீன் கேள்வி.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
புதிய அரசாங்கம் 2016 அமைச்சராக இருக்கும் போது முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களை கைது செய்துள்ளது. இது ஒரு நல்ல விடயம் காரணம். இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.அதனை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் அதே நேரம் முழு உலகத்தினை ஈர்த்த விடயமாக காணப்படுவது மத்திய வங்கியின் கொள்ளையாகும். அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களாக முன்னாள் பிரதம் ரணில் விக்கிரசிங்கம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோர், மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.இவர்கள் யாரும் நல்லாட்சி அரசாங்கத்தினால் கைது செய்யப்படாமையினால் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக 65 லட்சம் பொது மக்கள் இந்த ஜனாதிபதி கோட்டபாயவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்துளார்கள.; ஆகவே அந்த சம்பவத்துடன் தொடர்படையவர்களை புதிய அரசாங்கம் உடனடியாக கைது செய்து பொது மக்களின் பணத்தினை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும.; என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இன்று (23) ஹட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.; அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்கள் பிரதமராக இருந்த போது அவர் ஒரு தடைவை பிரதமர் பதவியினை விட்டுக்கொடுத்து விட்டு கௌரவமாக வெளியாறினால் ஆனால் இன்று அவர் பல அரசியல் தொல்விகளை சந்தித்தும் கட்சியின் தலைமை பதவியினை விட்டுக்கொடுக்காது இருப்பது அனைவரது கவனத்தினையும் ஈர்;த்து வருகிறாது.மாறாக அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்தி ஐக்கிய தேசிய கட்சியினை மேலும் பிளவு படுத்தி பலவீனமாக்கி அதனுடாக தலைமை பதவியினை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்hசட்டுக்களிலிருந்து ; தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக இதன விட்டுக்கொடுக்காது செயப்படகிறாரா? என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -