தலைவர் இல்லாத காரணத்தினால் தவிக்கிக்றோம்.-காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்

பாறுக் ஷிஹான்-
லைவர் இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு சிக்கிக் கொண்டு இருக்கின்றோம் இன்று மாற்று இனத்தவர்களின் துன்பங்களுக்கு நான் ஆனால் கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.

மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) மல்வத்தை விபுலானந்ததா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மேலும் தனது கருத்தில்..
எமது தேசியத் தலைவர் மிகவும் திறம்பட பாரிய ஒரு நிருவாகத்தை நடத்தியிருந்தார். அந்த நிர்வாகத்தில் மிகவும் உன்னதமான கடைபிடிக்கப்பட்டது ஒழுக்கம் அந்த நிர்வாக செயல்பாட்டில் ஒரு சிறிய துஷ்பிரயோகம் கூட இடம்பெற்றிருக்கவில்லை.உன்னதமான தலைவர் இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு சிக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
இன்று மாற்று இனத்தவர்களின் துன்பங்களுக்கு நான் ஆனால் கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் சிறந்த ஒரு மாற்று நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.பழகிப் பார்த்தால் பாசம் தெரியும் வைத்துப்பார்த்தால் எமது வீரம் தெரியும் என்ற உண்மையான சரித்திரத்தை நாம் ஒற்றுமையுடன் என்று காட்ட வேண்டிய சுழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்ரன் கலந்துகொண்டதோடு ,விஷேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன்,இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ.நிதான்சன்,மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜி.கணேஸ்வரன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -