எதிர் பார்த்தது போல் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் எதிர் வரும் பொது தேர்தலில் எவ்வாறு வாக்குகளை கூட்டுவது?
அரசாங்க தரப்பு என்பதை வைத்து எவ்வாறு முஸ்லிம்கள் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு கண்டு முஸ்லிம்கள் மனதை வெல்வது?
கூட்டுக்கட்சிகள் மத்தியில் பரஸ்பர பேச்சுவார்த்தை, புரிந்துணர்வுகள், வாக்களித்த நான்கு லட்சம் முஸ்லிம்களுக்கும் அரசின் பிரதியுபகாரம் என்ன, அதே 4 லட்சத்தை கூட்டுவதா அல்லது ஒன்றுமே செய்யாமல் இருந்து அதனையும் குறைப்பதா என்றெல்லாம் எந்த பேச்சுவார்த்தைகளையும் களத்தில் காணவில்லை.
இப்படியே பொதுத்தேர்தல் வரை இருந்தால் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் மொட்டில் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையே வரும்.
அதனால் மொட்டு கட்சியின் தலைவர் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதில் தலையிட்டு ஆவன செய்ய முன் வர வேண்டும்.
-