பௌத்த சமூகப் பணிகளுக்காக புதிய தபால் முத்திரை வெளியிடும் நிகழ்வு அண்மையில் குருநாகலையில் அமைந்துள்ள கொழும்பகம ஸ்ரீ மியுகுணாராமய ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்;
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர், கொழும்பகம விஹாரையின் விஹாராதிபதி இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களைப் பாதுகாத்தார். இந்த நகரைப் பாதுகாத்தார். நாம் அனைவரும் மனிதர்கள். ஒன்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 'யார் ஒருவர் இந்த உலகில் பிறக்கிறாரோ, அதன் போதே அவர் இறப்பையும் தன்னுடன் அழைத்து வருகிறார்'. இதனை விளங்கிக் கொண்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் இலேசானது. நாம் அந்த வாழ்க்கைக்குத் தயாராகவேண்டும்.
முழு நாட்டிலும் முஸ்லிம் மக்களுக்கும், பௌத்த மக்களுக்கும் இடையில் சற்று நம்பிக்கையின்மை காணப்படுவதை நாம் மறுக்க முடியாது. நாம் அதனை இல்லாமல் செய்யவேண்டும். எமது மார்க்கத்திற்கு அமைய நாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். இலங்கையில் நடந்த சம்பவத்தை உலக தீவிரவாத சதிகளாகவே நாம் காண்கிறோம், இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைந்து ஆராய்ந்து வருகிறார்.
இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறைக் குண்டு சத்தம் கேட்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதனை உருவாக்க எம்மால் முடியும். கொழும்பகம விஹாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட அனைவரும் இணைந்து, வடமேல் மாகாணத்தில் நாம் இந்தத் திட்டத்தை ஆரம்பிப்போம் என ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேலும் தெரிவித்தார்.