ஜனாதிபதி கோட்டபாயவின் கருத்து மிகவும் வரவேட்க தக்கது-


ஹட்டன்ப்கே.சுந்தரலிங்கம்-

டந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்தாது தொடர்ந்து அதனை முன்னெடுக்குமாறு புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் வரவேட்கத்தக்க விடயமாகும்.
 என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்ன இராதாகிருஸ்ணன்ணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி  தெரிவித்தார்.

மஸ்கெலியா கவரவெல தோட்டத்தில் சுமார் 350 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ள புதிய பாலத்திற்கு இன்று (17) மாலை அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஸ்கெலியா,கிவ்லேண்ட்,எனடல்,ஸ்ர்ப்பி,ஓமிடல்,ஸ்காப்ரோ,மீறியாகோட்டை,
லேட்புரூட்,உள்ளிட்ட சுமார் ஆறு தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் கடந்த பல வருடகாலமாக மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

இதனை புனரமைத்து தருமாறு கல்வி ராஜங்க அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களிடன் பொது மக்கள் கோரிக்கை விடுத்தற்கமைவாக மாகாண சபை உள்ளுராட்சிகள் அமைச்சின் 350 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பாலத்தினை புனரமைபப்தன் மூலம் சுமார் 8000 குடும்பங்களைச் சேர்ந்த 12000 இற்கும் மேற்பட்ட பொது மக்களும் கவரவெல பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களும் நன்மையடைய உள்ளனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...
குறித்த பாலம் ஆட்சி மாற்றம் இடம்பெற்று ஆரம்பிக்க கிடைத்தனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.குறித்த பாலம் மூன்று மாத காலப்பகுதயில் நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை கடந்த அரசாங்கமாயினும் சரி எதிர்கால அரசாங்கமாயினும் சரி முன்னெடுக்கும் போது அதற்கு பூரண ஆதரவினை நாங்கள் வழங்குவதற்கு ஒரு போதும் பின்நிக்க போவதில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா,ராஜாராம்,தோட்ட முகாமையாளர்,உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -