இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம். பௌசர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரித் திருத்தங்களின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.