குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்ட மா அதிபர் இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றமை, ஒன்றுக் கொன்று முரணான வாக்குமூலங்களை வழங்கியுள்ளமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கு அமைய, கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று (16) காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) வாக்குமூலம் அளிக்க ஆஜரான குறித்த பெண், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அங்கொடையிலுள்ள தேசிய மனநல சிகிச்சை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், மீண்டும் பிற்பகல் 4.00 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி அங்கிருந்து விடுதலையானார்.
அதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.