மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் உலமாக் கட்சியின் முதலாவது கிளை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்யிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கமைய ஏறாவூர் புன்னங்குடா வீதிக்கருகில் சமூக சேவகர் எம்.றிபாய் தலைமையில் இக்கட்சியின் முதலாவது கிளை திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது குறித்த திறப்பு விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் உலமாக் கட்சியின் செயலாளர் சாஹீத் முபாறகிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என தத்தமது மகஜர்களை கையளித்ததுடன் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடம் தமது பிரச்சினைகளை விபரிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்து தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்ததுடன் முஸ்லிம் உலமாக் கட்சி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தறிக்கப்பட்ட முதலாவது கிளை இதுவாகும்.