ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரச்சினையினை தீர்த்து கொண்டால் சஜீத் பிரமதாசவின் தோல்வி நிரந்தரமானதல்ல.

ஹட்டன் கே.சந்தரலிங்கம் -

க்கிய தேசிய கட்சியில் தலைவர் போட்டியில் நீயா நானா என்று இல்லாது தலைவர் பிரச்சினையினை தீர்த்துக்கொண்டால் இன்னும் மூன்று மாதங்;களில் நாம் மீண்டும் ஆட்சியினை கைப்பற்றிவிடலாம.; ஆகவே சஜித் பிரேமதாச அவர்களின் தோல்வி என்பது ஒரு நிரந்தரமான விடயமல்ல.

1980 ஆண்டுகளில் உங்களுக்கு தெரியும் எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் 38 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியினை ஈட்டிக்கொண்டது அப்போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இரண்டு ஆசனங்களை மாத்திரம் தான் பெற முடிந்தது. 

ஆனால் மூன்று மாதங்களில் அந்த நாடாளுமன்றம் களைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்ற போது. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஆசனங்களை கூட பெற முடியாது போனது. அதே போன்று வெற்றி தோல்வி; ஒரு சாதாரண விடயம.; அந்த நிலை இங்கும் உருவாகலாம். என முன்னாள் விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அமைச்சர் இராதாகிருஸ்ணனின் வேண்டுக்கோளுக்கமைய குன்றும் குழியுமாக காணப்பட்ட மஸ்கெலியா வலதல பெருந்தெருக்கள் அமைச்சு சுமார் 11 கோடியே 20 லட்சம் ரூபா செலவில் சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் காபட் இட்டு புனரமைக்கப்பட்டது. அவ்வீpதியினை நேற்று (22) திகதி மாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்..
காபட் பாதை என்பது மலையக மக்களுக்கு கிடைக்காத ஒரு விடயமாக ஒரு காலகட்டத்தில் காணப்பட்டது. ஆனால் இந்த நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 20 மேற்பட்ட இதே போன்று காபட் வீதிகளை திறந்து வைத்துள்ளோம்.இன்னும் பல வீதிகளை அபிவிருத்தி செய்து திறந்து வைக்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் அனைவரும் நாங்கள் சொல்வதனை கேட்டு வாக்களித்தீர்கள். 

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க கோரினோம். நீங்கள் அனைவரும் வாக்களித்தீர்கள.; வாக்கு என்பது ஜனநாயக உரிமை. இன்று ஆனால் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களித்தனால் இன்று அவர் வெற்றி பெற்றுள்ளார். அதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.ஏனென்றால் ஜனநாயக ரீதியில் யார் அதிகமான வாக்குகளை பெறுகிறார்களோ அவர் தான் ஜனாதிபதி. 

ஆனால் எமது தோல்வி நிரந்தரமான தல்ல அது ஒரு தற்காலிக இடைவெளி. ஆகவே அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் எமது பலத்தினை நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழு நாடே ஒரு தொகுதியாக கொண்டு நீங்கள் வாக்களித்தீர்கள். ஆனால் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எட்டு பேரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். இதில் யார் உங்களுக்கு வேலைகளை செய்த கொடுத்தார்களோ?யார் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்களோ? அவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்;.அமைச்சர்பதவி என்பது சாதாரணமாக வரும் போகும.

ஆனால் உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கககூடிய சக்தியுள்ளவர்களுக்கே நீங்கள் எதிர்வரும் ஏப்ரேல் மாதம் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்;டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்,முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் ரா.ராஜராம்,உட்பட மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் முக்கியஸத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -