அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரகாலமாக் பொழிந்துவரும் அடைமழையையடுத்து நேற்றையதினம்(7)மழை சற்று தணிந்திருந்திருந்தது. வெயில் எறித்தது.
நீண்டநாட்களுக்குப்பின்னரான வெயில் ஆதலால் மக்கள் மகிழ்ச்சியில் வீடுவாசல்களை சுத்தம் செய்வதிலும்உடுப்புகளை சுத்தம் செய்வதிலும்அக்கறை செலுத்தினர்.
வெள்ளத்தால் சூழ்ந்திருந்த மக்கள் சற்று ஆறுதலடைந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் மிகக்கூடுதலான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பிரதேசம் காரைதீவுப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பாதிக்கப்படட பிரதேசங்களுக்குச்சென்று பார்வையிட்டுச்சென்றதாக தெரியவருகிறது.
அங்கு 3327குடும்பங்களைச்சேர்ந்த 10532பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 65குடும்பங்கள் இடம்பெயர்ந்து உற்றார்உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
நேற்றையதினம் அங்கு வீதிகள் வீடுவாசல்கள் வயல்நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக்காட்சியளித்தது. வெள்ளத்தை அகற்றும் பணிகள் நேற்றும் இடம்பெற்றன.
பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் தமது ஊழியர்களை கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
அவரும் ஸ்தலத்தில் நின்று பணியாற்றியதைக்காணமுடிந்தது.
வடிகான்கள் பல மூடுண்டதால் வெள்ளநீர் ஓடமுடியாமல் அருகிலுள்ள வளவு வீடுகளுள் தேங்கிநிற்கிறது. பலரின்வீடுவாசலுக்குள் நீர் ஏறிவிட்டதனால் அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜேசிபி உதவியுடன் வடிகான்களை சுத்தப்படுத்தி வெள்ளநீரை வடிந்தோடச்செய்வதற்கு தவிசாளர் ஜெயசிறில்உடனடி நடவடிக்கை எடுத்தார்.மற்றுமொரு ஒரேயொரு பெண் உறுப்பினரான சி.ஜெயராணியும் கூட நின்று இப்பணிகளுக்கு ஒத்துழைத்தார்.
அத்துடன் மேலதிகமான வெள்ளநீரை முகத்துவாரத்தைவெட்டி கடலுக்குள் வெட்டிவிடப்பட்டது.ஏலவே சிலவிசமிகள் பிழையான இடத்தில் முகத்துவாரத்தை வெட்டியகாரணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பை தடுக்கஅணைகள் போடப்பட்டன.இராணுவமும் உதவிசெய்தது.
இன்னும் மழைபொழிந்தால் பல குடும்பங்கள் இடம்பெயரநேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.