பற்றாக்குறையானவலயங்களுக்கான ஆசிரியர்களதுபட்டியல் தயாராகிறது
ஆசிரியர் இடமாற்றம் பற்றி கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் மன்சூர்!
காரைதீவு நிருபர் சகா-எமது மாகாணத்தில் ஆசிரியர்களது உரிமைகளைப்பேணும் அதேசந்தர்ப்பத்தில் மாணவர்களது கற்கும் உரிமையையும் பேணுவோம். எமது மாணவர்களுக்கு ஒருபோதும் நாம் அநியாயம் செய்யமாட்டோம். பற்றாக்குறை நிலவும் வலயங்களுக்கு பதிலீடான ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான பட்டியல் தயாராகிவருகிறது.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்த 128ஆசிரியர்கள் வெளிவலயங்களுக்கு இடமாற்றப்பட்டிருக்கின்ற அதேவேளை பதிலுக்கு ஆக 28ஆசிரியர் மட்டுமே அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதே அதுபற்றி என்ன சொல்கிறீர்கள் எனக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இதுபற்றிக்கூறுகையில்:
மாகாணமட்டத்தில் நடைபெறும் இந்த ஆசிரியர் இடமாற்றம் வழமைபோன்று ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் எனது சிறிதளவு தலையீடும் இல்லாமல் நடைபெற்றது.
மேன்முறையீட்டு;க்கு மாத்திரமே நான் சம்பந்தப்படுவேன். எது எப்படியிருந்தாலும் மாகாணகல்வித்திணைக்களத்தை நோக்கி சுட்டுவிரல் நீட்டும்போது வகைகூறவேண்டியவன் யான் என்ற வகையில் இதனைக்கூறுகிறேன்.
இம்முறை இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கைதமிழர் ஆசிரியர் சங்கம் கிழக்குமாகாண தமிழர் ஆசிரியர் சங்கம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியசங்கம் ஆசிரியர் விடுதலை முன்னணி இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியசேவை சங்கம் ஆகிய ஏழு ஆசிரிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதாயிருந்தால் அவர் குறித்த வலயத்தில் 5வருட சேவையைச்செய்திருத்தல் வேண்டும். குறித்த மாவட்டத்துள் வலயம் விட்டு வலயம்மாறுவதானால் குறைந்தது அங்கு 10வருடசேவையாற்றியிருத்தல் வேண்டும் என்பது நியதிகள்.
அதன்படி ஆசிரியர் தொழிற்சங்கப்பிரதிதிகளுடன் இணைந்தே பிஸ்தாப இடமாற்றப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதேவேளை அப்பட்டியலில் இடமாற்றம்காரணமாக பற்றாக்குறை ஏற்படும் மட்டு.மேற்கு கல்குடா போன்ற வலயங்களுக்கு பதில் ஆசிரியர்களை ஏனைய வலயங்களிலிருந்து தெரிவுசெய்யும் பணியும் சமகாலத்தில் இடம்பெற்று வந்தன.
இரண்டு பட்டியலையும் சமகாலத்தில் வெளியிடவேண்டுமென்பதற்காக எமது திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது.
இந்தவேளையில் கிழக்குமாகாண தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கமால்தீன் ஆகிய இருவரும் கிழக்குமாகாண கல்விச் செயலாளiரைச் சந்தித்து உடனடியாக ஆசிரியர் இடமாற்றப்பட்டியலை வெளியிடவேண்டும் எனக் கோரியுள்ளனர்.
அதற்கிணங்க செயலாளர் திரு.முத்துபண்டா எம்மிடம் அப்பட்டியலை வெளியிடுமாறு கட்டளையிட்டார். நாமும் வெளியிட்டோம்.
அப்படி இருசங்கங்களும்அவசரப்பட்டிருக்காவிட்டால் இரு பட்டியலையும் ஏககாலத்தில் வெளியிட்டிருக்கமுடியும்.
தற்சமயம் நாம் பற்றாக்குறை நிலவும் மட்டு.மேற்கு கல்குடா போன்ற வலயங்களுக்கான ஆசிரியர் பட்டியலை தயார்செய்துவருகிறோம்.
எந்தவொரு வலயத்தையோ மாணவரையோ நாம் புற்நதள்ளமாட்டோம். மாணவருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்றார்.