அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெலி, இளைஞர் மன்ற உறுப்பினர்களை செயலமர்வுக்கு வரவேற்றதுடன், தலைமைத்துவம் மற்றும் சமூக சேவையின் முக்கியம் தொடர்பில் அவரது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். 'அனைத்தையும் உள்வாங்கிய, சிந்தனையுள்ள, மற்றும் தைரியமான தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளுமாறும்', 'விமர்சன ரீதியான சிந்தனையாளர்களாகவும் மற்றும் ஆர்வமுள்ள தகவல் நுகர்வோராகவும்' இருக்குமாறும், மற்றும் '(இலங்கையின்) பல்வகை சமூகங்களின் அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களை புரிந்துகொள்ளுமாறும்' அவர் உறுப்பினர்களை ஊக்குவித்தார். சமூகசேவை மீதான அவர்களின் உறுதிப்பாட்டை அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் கெலி பாராட்டியதுடன், உதாரணமாக விளங்கக்கூடிய முன்மாதிரியானவர்கள் என்றும் அவர்களை குறிப்பிட்டார். வேறுபட்ட மதங்கள், சமூகங்கள் மற்றும் இடங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இளைஞர் மன்றம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், வேறுபட்ட சமூகங்களின் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தமது புதிய கண்ணோட்டங்களை பகிர்ந்தும் இந்த புதிய அனுபவங்களுக்கு தயாராக இருப்பதையிட்டும் அவர்களை பாராட்டினார்.
பிரதானமாக பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட இளைஞர் மன்றம் நம்பிக்கைக்குரிய இளம் இலங்கையர்களுக்கு தொழில்சார் திறன்களை வளர்ப்பதற்கும், போதிய சேவைகள் கிடைக்காத சமூகங்களுக்கு சமூக சேவைத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும், செயற்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பொன்றை வழங்குகிறது. சமூக சேவையுடன் கூடிய தனிப்பட்ட மற்றும் தொழில்சார் அபிவிருத்தியே இளைஞர் மன்றத்தின் அடிப்படை அம்சங்களாகும். இளைஞர் மன்ற தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் மற்றும் 60 மணித்தியாலங்கள் சேவை செய்கிறார்கள். அவர்களின் காலப்பகுதியில் இளைஞர் மன்ற தன்னார்வத் தொண்டர்கள் தலைமைத்துவப் பயிற்சி, திட்ட முகாமைத்துவ அனுபவம், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் பங்கெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்ட இளைஞர்கள் மற்றும் சமூக பங்காளர்களுடன் வலையமைப்புக்களை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் பயிற்சி மற்றும் அனுபவங்களை பெறுகின்றனர். தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளாக பெறுமதியான அனுவங்களை பெற்று இளைஞர் மன்ற பங்கேற்பாளர்கள் அவர்களது சமூகங்களுக்குள் உள்ள10ர் திட்டங்களை உருவாக்கி அவற்றை செய்படுத்தவும் செய்கின்றனர். இத்திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.