சம்பந்தன் ஐயா சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளளாமல் சிலர் கருத்துக்கூறுகின்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்

ம்பந்தன் ஐயா சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளளாமல் முன்னுக்குப்பின் முரணான வார்த்தைகளை மாற்றி கூறி சில புதிய கட்சிகள் மக்கள் மத்தியில் தங்களது தவறை மறைக்க முற்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றச்சாட்டு

குறுகிய அரசியலை செய்ய முற்படும் சில கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது இந்திய இலங்கை அரசுக்கு வேண்டுமென்றால் அது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் nமிழ் மக்களின் பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

 அது தீர்க்கப்பட வேண்டும் அதற்கான பொருப்புக் கூறலை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் என்னும் கருத்தப்படவே அவர் குறிப்பிட்டிருந்தார் அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் வார்த்தைகளை முன்னுக்குப்பின்னாக மாற்றி அது ஒரு தவறான செய்தியாக சில ஊடகங்களில் பேசுபொருளாக்கி விட்டார்கள் இந்த சம்பவம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அதிலும் இப்பொழுதான் முளைவிட்ட கட்சி ஒன்று ஊடக அறிவிப்பையும் செய்திருந்தது ஒழுங்காக வேர் ஊன்ற முன்னர் சமயோசித புத்தி இல்லாதவர்களாக நடந்து கொள்வது பொருத்தமற்றது இவ்வாறு உடகத்தின் மூலம் அந்த செய்தியை திரிபுபடுத்த முற்பட்டது ஒட்டு மொத்த தமிழ்ர்களையம் இழிவு நிலைக்கு உட்படுத்தும் விடயமாகும்.

 இவர்களது செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சில ஊடகத்துறைகள் கூட இப்படியான திரிபு பட்ட bவெளியிடுவதன் மூலம் தமிழ் தேசியத்தை ஒட்டு மொத்தமாக உருக்குலைக்க முற்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது சர்வதேசத்துக்கான சரியான செய்தியை சொல்லக் கூடிய ஒரே ஒரு கடசி தமிழ்தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் எனவே அர்கள் அவர்களது கடமைகளை சரியாகவே செய்து வருகிறார்கள் பொது ஜன ஊடகத்துறைகள் இவ்வாறான தவறான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை விதைப்பவர்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும் உண்மைக்கு புரம்பான கருத்துக்களை மாற்றி சொல்பவர்கள் அவர்களாகவே மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடுவார்கள்.

 ஆனால் இன்றைய தேவை அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக நிற்கவேண்டுமே தவிர சந்திக்கு சந்தி கட்சிகளை ஆரம்பித்து எதிர் கட்சிகளில் நின்று கூக்குரல் இடுவதால் நண்மைகள் எதுவும் நடக்கப்போவதில்லை ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல் தமிழ் மக்களாகிய நாம் கட்சி ரீதியாக பிரிந்திருப்பது சிங்கள அரசுக்கு சாதகமாகும் நிலை ஏற்படக் கூடும் என்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -