மிகக் குறைந்த வேதனத்தில் திறந்த மனப்பாங்குடன் தங்களுடைய நேர காலத்தை அர்ப்பணித்து முன்பள்ளி கல்விச் சேவையினை முன்னெடுக்கின்ற ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தேவையான உதவி, ஒத்தாசைகளை பெற்றோரும் கல்விச் சமூகமும் முன்னெடுக்க வேண்டும் .
முன்பள்ளியில் எமது பிள்ளைகளை கல்வி கற்க எவ்வளவு உறுதுணையாக இருக்கிறோமோ அதே போன்று உயர் கல்வி வரை எமது பிள்ளைகளுக்கு வழிகாட்டல்களை பெற்றோர்கள் முன்னெடுத்து செல்லவேண்டும் .இது எமக்கு ஓர் பாரிய பொறுப்பாகும் இதனை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
என, கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் பட்டமளிப்பு விடுகை மற்றும் கலை விழா, பாலர் பாடசாலை ஸ்தாபகர் ஏ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் (15) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.