ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறையில் மக்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

அஸ்ரப் ஏ சமத்-
ம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னைய அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு நிர்மணிக்கப்பட்டும் தற்பொழுது கைவிடப்பட்டு, அப்பிரதேச மக்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் பற்றி வீடமைப்பு இராஜங்க அமைச்சா் தலைமையில் கடந்த சனிக்கிழமை 14ம்திகதி ஆராயப்பட்டன. வீடமைப்பு அலுவலகத்தில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியா்களது பிரச்சினைகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இவ் கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பா.உறுப்பிணருமான நாமல் ராஜபக்ச மற்றும் வீடமைப்பு பொதுவசதிகள் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுருத்த ஆகியோா்களினால் கலந்துரையாடப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சா் - ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் வீடமைப்பு அமைச்சரினால் 337 வீடமைப்புக் கிராமங்கள் கடந்த 5 வருட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு 84 கிராமங்களே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் காரியலாயத்தில் மட்டும் 900க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அரச சேவைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். அங்கு கிராம சக்தி உத்தியோகத்தர்கள் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு 645 பேர் நியமனம் பெற்று அரச சம்பளம் பெறுகின்றனா். மாவட்ட முகாமையாளருக்கு ஒரே ஒரு வாகனம் உள்ளது. ஆனால் அங்கு 9 சாரதிகள் உள்ளனா். 17 அலுவலக உதவியாளா்கள் உள்ளனா். வீடமைப்பு அபிவிருத்திக்கு மட்டும் 337 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது ஆனால் அங்கு முன்னாள் வீடமைப்பு அமைச்சரினால் தொழில் வழங்கப்பட்டு கடமையாற்றும் ஊழியா்களுக்கு மட்டும் 480 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2015ல் 12 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன., 2016 ல் 77 வீடமைப்பு கிராமங்களில் 49 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 2017ல் 50 கிராமங்கள் அதில் 8 கிராமங்களே திறக்கப்பட்டுள்ளன. 2018ல் 104 கிராமங்களில் 15 கிராமங்களே நிர்மாணம் முடிவடைந்துள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு முறையான வீடமைப்பு கொள்கைகள் , கடன் முறைகள் திட்டங்கள் , அறவிடும் முறைகள் , இந்திய அரசினால் வழங்கப்பட்ட மாணிய அடிப்படையினாலான வீடமைப்பு நிதிகள் முறைகேடாகவே பயண்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளை அரை நிர்மாணத்திலும் வேறு சிலா் அத்திவாரம் மட்டும் நிர்மாணித்துள்ளனா். அவா்களுக்கு முறையான நிதி வசதிகள் திட்டங்கள்,வரைபுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிா்நோக்கி வருகின்றனா்.
வீடமைப்பு கிராமங்கள் நிர்மாணிப்பதற்கு ஆகக் குறைந்தது 40 பேர்ச் காணியை பயண்படுத்தும்போது அதற்காக நகர அபிவிருத்தி அ்திகார சபையிடமோ அல்லது உள்ளுராட்சி சபைகளிடமோ அனுமதி பெறப்படல் வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ப்படவில்லை. அதனை விட யாணைகள் மிருகங்கள் வாழும் வன வளப் பிரதேசங்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்படாமல் அக் காணிகள் வீடுகள் நிர்மாணிக்க பயண்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணா் நாமல் ராஜபக்ச -
வீடுகள் இல்லாதோறுக்கு கட்டாயம் வீடுகள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். ஆனால் சாதாரண மாவட்ட அலுவலகத்தில் இவ்வாறானதொரு பாரிய தொகை ஊழியா்கள் எதற்கு? வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைப் பயண்படுத்தி ஆயிரக் கணக்கில் தொழில் வழங்கப்பட்டுள்ளன. கம்பாந்தோட்டை மாவட்டக் அலுவலகத்தில் உள்ள ஊழியா்களுக்கு மட்டும் சம்பளம் வழங்குவதற்கு 450 மில்லியன் ருபா செலவாகியுள்ள்ன. ஆனால் வீடுகள் நிர்மாணிக்கவென 350 மில்லியன் ருபாவே செலவிடப்பட்டுள்ளன. எனவும் பா.உ கேள்வி எழுப்பினாா். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -