ஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.-

பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம


எம்.என்.எம்.அப்ராஸ்-

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருதுக்கான மகளிர் பிரிவுகள் அங்குராப்பணமும் மக்கள் சந்திப்பு (07/12/2019) கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி யூ. எம்.நிசார் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜஙக அமைச்சரும்,
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவியுமான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம
உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றகையில்
இப் பிரதேசத்தில் உங்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கோள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள என்னை அபிவிருத்தி குழு தலைவியாக நியமித்துள்ளனர் .இதன் மூலம் இங்குள்ள சகல இன மக்களுக்கும் சேவை செய்ய முடியும் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் .

நாட்டில் பெண்கள் எங்களுடன் இணைத்து பல வேலைத்திட்டங்களில் இணைந்து செயலாற்றுகின்றனர்.

கோடடாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டின் பல நல்ல வேலைத்திட்டங்ககளை மேற்கொண்டு வருகின்றார். எமது பிள்ளைகள் நாட்டில் நற் பிரஜயையாக உருவாக்க பொருத்தமான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். இவரின் தலைமைத்துவம் மூலம் நாடு அபிவிருத்தி அடையும் அது மட்டுமல்ல இதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்றார்.

இதன் போது கலந்து கொண்ட பெண்கள் தங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வினை சமூக சேவையாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருது பிரிக்கான கிராமத் தலைவரும் அறிவிப்ப்பாளர் ஐ. ஜாபீர் (ஜே.பி) தொகுத்து வழங்கினார்.

இதன் போது கல்முனை தொகுதி இளைஞசர் பிரிவு அமைப்பாளர் எஸ்.எல்.றசீட், கட்சியின் நட்பிட்டிமுனை பிரிவு கிராமத் தலைவர் ஆர்.எம் .ரொஷான் ஆகியோர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -