திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஐக்கிய சிறைச்சாலை ஒன்றியத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(22) சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.
சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் 30 கைதிகளின் பிள்ளைகள் 85 பேருக்கு இதன் போது பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்சில் சிறைச்சாலை நலன்புசிச் சங்கத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன்,சிறைச்சாலை பிரதான ஜெயிலர் சமந்த லியனகே,சிறைச்சாலை ஐக்கிய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் கைதிகளின் பிள்ளைகள் பலரும் கலந்து கொண்டார்கள்.