திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்கோ பகுதியில் இயங்கி வரும் வலை பிரி மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பும் ,கௌரவிப்பும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் தி/அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் இன்று (16) இடம் பெற்றது.
இதில் குறித்த பெண்கள் சங்கத்தின் தலைவி திருமதி. சாஹிதீன் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பாடசாலையின் தமிழ் தினப்போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல்,சமூக ஆர்வலர்கள் கௌரவிப்பு உள்ளிட்ட இலவச அப்பியாசக் கொப்பிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஜே.துவான் பஹார்டீன், பெண்கள் அபிவிருத்தி உதவியாளர் திருமதி எம்.ஏ.நஸ்ரின்,பாடசாலையின் அதிபர் எஸ்.அலாப்தீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நூர்ஜகான், திருகோணமலை மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் எல்.மயூரன் ,திருகோணமலை பிரதேச சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி சட்டத்தரணி அனீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.