மு.கா. வளர்ச்சிக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர் பள்ளிக்காக்கா ஹமீத்அனுதாப செய்தியில் முதல்வர் றகீப் தெரிவிப்பு..!;


அஸ்லம் எஸ்.மௌலானா-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் அளப்பரிய பங்களிப்பு முன்னாள் கல்முனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எஸ்.ஹமீத் அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கல்முனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எஸ்.ஹமீத் அவர்கள் இன்று திங்கட்கிழமை (09-12-2019) காலமானார். இவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கல்முனை மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

பள்ளிக்காக்கா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஏ.எம்.எஸ்.ஹமீத் அவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலம் தொட்டு அக்கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வந்துள்ளார். எமது கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய போராளியாக இவர் திகழ்ந்துள்ளார். அதனால் எமது தலைவர் 'சத்திய நட்சத்திரம்' எனும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்திருந்தார்.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் இவர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில், 1998ஆம் ஆண்டு தவிசாளராக இருந்த ஐ.ஏ.ஹமீத் இராஜினாமாச் செய்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் ஏ.எம்.எஸ்.ஹமீத், தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தனது இறுதி மூச்சுவரை அரசியல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக சிவில் சமூக அமைப்புகள் ரீதியாகவும் கல்முனைப் பிரதேசத்தின் சமூக, கல்வி, கலாசார வளர்ச்சிக்காக இவர் பங்களிப்பு செய்து வந்துள்ளார். இவரது சேவைகள் புதிய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வல்ல இறைவன், இவரது நற்செயல்களை பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் வழங்க பிரார்த்திப்பதுடன் அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -