தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

ஐ. ஏ. காதிர் கான்-

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அதிபர் குறைபாடு நிலவும் பாடசாலைகள், அதிபர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கி, இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதிகளின் அடிப்படையில், அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாத நிறைவிற்குள், வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அதிபர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அனுமதியை, பொதுச்சேவை ஆணைக்குழு வழங்காமையால் நியமனங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் குறித்த விண்ணப்பங்களை மீள் பரிசீலனை செய்வதற்கும், அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
274 தேசிய பாடசாலைகளில் தற்போது அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -