கொட்டகலை ஹரிட்டன் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஐயப்ப நற்பணி மன்றம் ஒழுங்கு செய்திருந்த ஐயப்ப பூஜை இன்று(25) கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸத்தானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் மஹா சக்தி பூஜை,18 ம் படி மங்கள விளக்கேற்றல்,சரணகோவை ,காப்பு நூல் பாடுதல், அஸ்ட்ட தோத்தரம் பஜனை ஆகியன இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து மஞசள் மாதா தேவி பூஜை ,திருவிளக்கு பூஜை,தீப பூஜை,அலங்கார பூஜை,ஐயப்ப சுவாமிக்கு சகஸ்வர நாம 1008 அர்;ச்சனை இடம்பெற்று பஜனை பாடலகளும் இசைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஐயப்ப குரு முதல்வர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு விபூதி பிரசாதம் ஆகியனவும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு ஐயப்ப மாலை அணிந்துள்ள ஐயப்ப பக்தர்கள் உட்பட பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.