கட்டார் நாட்டின் தேசிய தின வைபவம்

ட்டார் நாட்டின் தேசிய தின வைபவம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் (18) புதன் கிழமை மாலை கட்டார் தூதரக பிரதம அதிகாரி காலித் சாலஹ் அல்-மாரி தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார மற்றும் மகளீர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தேசிய தின நினைவு கேக் வெட்டுவதையும் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம்.



கட்டாா் நாட்டில் இலங்கையா்கள் 1இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் அங்கு தொழில் செய்கின்றனா். அத்துடன் கட்டாா்- இலங்கை பொருளாதாரத்தில் இலங்கைக்கு வருடாந்தம் அமேரிக்க டொலா் 400-500 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையின் கட்டாா் துாதுவா் ஆலயம் டொகாவில் 1997ல் திறக்கப்பட்டது. கட்டாா் துாதுவா் ஆலயம் 2004ல் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையேநீண்ட கால நட்புறவு தொடா்ந்தும் பேனப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேயிலை , பழ வகைகள், மற்றும் மரக்கரிவகைகளை கட்டாா் நாடு ஏற்றுமதி செய்கின்றது. இலங்கையின் அவ்வப்போது நிகழும் அனா்த்தங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு நன்கொடைகளையும் உதவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -