'வறுமைக்கு கல்வியே எதிர்காலம் ' கற்றல் உபகரணங்கள் வழங்கும்நிகழ்வு!

காரைதீவு நிருபர்சகா-
வீரமுனை காயத்திரி சன சமூக நிலையத்தினால் வறுமைக்கு கல்வியே எதிர்காலம் என்ற மகுட வாசகத்து இணங்க பெண் தலைமைத்தும் தாக்கும் குடும்பங்களில் கல்விபயிலும் வீரமுனைஇ மல்வத்தை சொறிக்கல்முனை கோரக்கர் கிராம மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.

அவர்அங்கு பேசுகையில்:
எமது பிரதேசம் பின் தள்ளப்பட்ட பிரதேசமாக அபிவிருத்தி அடையாத பிரதேசமாக இருப்பதற்கு காரணம் எமது பிரதேசத்தில் அதிகாரிகள் கூடுதலாக இல்லாமையினாலாகும். அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட புறக்கணிப்புகள் பிரதேசத்தில் இடம் பெறுகின்றன .

தமிழர்களுக்கு என்று தட்டிக் கேட்கும் வல்லமையில் அதிகாரத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் பல புறக்கணிப்புகளும் இடம்பெறுகின்றன. நில அபகரிப்புகள் கல்வி தொடர்பான செயல்பாட்டு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இன்று பல புறக்கணிப்புகள் நடைபெற்று வந்தாலும் எமது இளைஞர்கள் மிகவும் விடாமல் இந்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் .

அந்த அடிப்படையில் இவர்களுக்கு நன்றி கூறுவதோடு எதிர்வரும் காலங்களில் நீங்கள் கற்று அதிகாரிகளாக வருவதும் ஊடாக எமது இனத்தையும் மதத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது எந்த ஒரு பகுதியாக நீங்கள் வந்தாலும் ஒழுக்கமும் ஒழுக்கம் என்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையாக இருக்கின்றது என்ற அடிப்படையில் அன்போடும் பணிவோடும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -