கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சுத்தம் செய்யும் சிறப்பு செயற்திட்டம் 05.12.2019 அன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
கொத்மலை இறம்பொடை சுரங்கத்திற்கு முன்னால் காலை 9 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
கொத்மலை பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்தச் செயற்திட்டத்தை கொத்மலையில் முன்னெடுத்தனர். அதில் கொத்மலை பிரதேச சபை உப தலைவர், உட்பட உறுப்பினர்களும், அரச அதிகாரிகள், வியாபாரிகள், பொது மக்கள் என பலரும் இணைந்து கொண்டனர்.