குறித்த இருவரும் இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போ உத்தரவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற குறித்த சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (13) இரவு மஹர பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதான இருவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்ததோடு, இதன்போது, சந்தேகநபர்கள் தாங்களே குறித்த வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான சாரதிகள் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.