புதிய ஜனாதிபதியினால் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற இக்காலகட்டத்தில் கொங்றீட் வீதிகளை அமைக்கு கொந்துராத்துக்கள் சம்பந்தமாக மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்படுமாயின் கொங்றீட் வீதிகள் நீண்டகாலம் பயண்படுத்தக்கூடியதாகவும் கொந்துராத்துக்காரர்களும், அதனை பங்கீடு செய்யும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ஊழல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடயமாகவும் மாறும் என்பதில் எவரிடமும் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.
அது மட்டுமல்லாமல் அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் மூலம் நிர்மாணிக்கப்படும் கட்டங்கள் மற்றும் உள்ளூர் வீதிகள் அனைத்தும் கொமிசன் எடுக்கப்பட்டும், கொந்துராத்துக்காரர்களின் சுரண்டல், சரியான திட்டமிடல் இன்மை, போன்ற நடவடிக்கைகளினால் ஒரு வருடத்துக்கூட தாக்குப்பிடிக்காத நிலைமைகளும், கட்டங்கள் வெடிப்புக்குள்ளாகி உயிராபத்துக்களை ஏற்படுத்தும் நிலைமைகள் நாட்டில் பரவலாக அதிகரித்துள்ளமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலைமைக்கும், மழை காலங்கள் மக்கள் அதிகளவில் அசெளகரியங்களுக்கு உள்ளாகுவதனை தடுப்பதற்கும் சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமாயின் மேற்குறிபிட்ட அபிவிருத்திகளுக்கான கொந்துராத்துக்களை இராணுவத்திடம் கையளித்து, குறிப்பிட்ட இலாப விகிதத்தினை இராணுவத்திடம் கையளித்து இலாபத்தில் பெரும் பகுதி அரச திறைசேரிக்கு கிடைக்கும் வகையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் இடத்து அது நாட்டு மக்களினால் பெரிதும் மதிக்கப்படும் விடயமகவும் வெற்றிகரமான விடயமகாவும் பார்க்கப்படும் என்பது நிதர்சனம்.