தொழிலாளர் தேசிய சங்கம்,தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் அணி கிளைத் தலைவிகளுக்கான மாநாடும் செயலமர்வும் இன்று நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித்தலைவியும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்துகொண்டதுடன்
இந்த மாநாட்டில் சிறப்பு அதிதியாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், உபதலைவர் சிவானந்தன், மகளிரணி இணைப்பாளர்கள், மாவட்டத் தலைவிகள், மாதர் சங்கத் தலைவிகள், பணிமனை பெண் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.