பிர்லியன்ட் கல்லூரி பட்டமளிப்பு விழாவும், வருடாந்த கலை நிகழ்வும்.
சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் 6வது சிறுவர் பட்டமளிப்பு விழாவும் வருடாந்த கலை நிகழ்வும் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை ஸாஹிறா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் பிர்லியன்ட் கல்லூரியின் ஸ்தாபகர் ஏ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவருமான ஏ.எல்.எம்.சலீம் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதீகளாக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.எம்.ஆயிஷா, முன்பள்ளி கல்வி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.அனீஸ் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.நஜிமுதீன், கணக்காய்வாளர் எம்.எஸ்.எம்.றிஸ்னி சிறப்பு அதிதீகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது பிர்லியன்ட் கல்லூரியில் முன்பள்ளி கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறும் 73 மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் வினோத உடை மற்றும் கலை நிகழ்வுகளும் விமர்சையாக நடந்தேறியது.