இலங்கையில் கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கு முகமாக நடாத்தப் படுகின்ற 35 ஆவது வருடாந்த கலாபூசணம் அரச விருது விழாவில் கிண்ணியாவை சேர்ந்த தினகரன் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான" அப்துல் முத்தலிப் அப்துல் பரீத் "என்பவருக்கு ஊடகத் துறைக்கான "கலாபூசண "விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இவர் ஊடகத் துறையில் சுமார் 41 வருட கால சேவை அனுபவத்தை பெற்றவருமாவார்.
இந் நிகழ்வு எதிர் வரும் , (15-12-2019) ஞாயிற்றுக் கிழமை மாலை 4 .00 மணிக்கு கொழும்பு- 07 நெலும் பொக்குண , தாமரைத் தடாகம் கலையரங்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெறவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா பல்துறை கலைஞர்கள்,கௌரவிப்பு விழாவில்
இவருக்கு "வித்தகர்" விருதும் வழங்கி கௌரவிக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் கிண்ணியாவை பிறப்பிடமாக கொண்ட அப்துல் முத்தலிப் (சேர்மன்) செய்தூன் பீவி ஆகியோர்களின் கனிஷ்ட புதல்வருமாவார்.