ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மலையகப்பகுதியில் பிறந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரச துறை, அரசியல், வர்த்தகம், சமயம், ஆன்மீகம் ,சமூகசேவை,விளையாட்டு,கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வீட்டுக்கும் நாட்டுக்கும் மலைககத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 'எம்மை நாமே கௌவிப்போம';,எனும் தொனிபொருளில் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) (அக்கரபத்தனை) நிசாந்தனி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மலையக சமூகத்தின் வளரச்சிக்காக பல்வேறு துறைகளில் பணிபுர்ந்தவர்கள் பொன்னாடை,அணிவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதன் போது அக்கரபத்தனை ஹோல்புறுக்,ஆக்ரோவா,டயகம,நல்லதண்ணி டயகம ஆகிய பகுதிகளை சேர்ந்த தோட்டங்களில் உள்ள 16 பாலர் பாடசாலை ஆசிரிகளும் சுமார் 130 பாலர் பாடசாலை மாணவர்களும் பதக்கம் சான்றிதழ், பரிசில்கள் ,ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு சான்றிதழ்கள்,பரிசில்கள் ,அப்பியாசப்புத்தகங்கள் ஆகியனவும் இதன் போது வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தையல் இயந்திரங்களும் சமூக சேவகர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் அவர்களின் ஆலோசனைக்கமைய அவ்வமைப்பின் இணைப்பாளர் கே. புஸ்பராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரபத்தனை பிரதேச சபைத்தலைவர் எஸ்.கதிச்செல்வம்,.நுவரெலியா ,அக்கரபத்தனை,பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,பிரிடோ நிறுவனத்தின் செயலதிட்ட பணிப்பாளர் சந்திரசேகரன்,பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம்,அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.